Eelatthalainagar news

செய்தி  

பிரதேச செயலகங்களில் தேசியக் கொடியேற்றி தேசியகீதம் இசைத்து பணிகளை தொடங்குமாறு, யாழ். அரசாங்க அதிபர் பணிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 25 சனவரி 2011, 12:29.29 PM GMT ]
 
பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் அனைத்திலும் அடுத்த வாரம் தொடக்கம் தேசியக்கொடி ஏற்றி, தேசியகீதம் பாடி நாட்டின் அபிவிருத்தி பற்றி பதவிநிலை அலுவலர்கள் உரையாற்றிய பின்னரே தமது அலுவலகப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதேநேரம் கடந்த திங்கட்கிழமையிலிருந்து சில பிரதேச செயலகங்களிலும் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் தேசியக் கொடியேற்றி அலுவலக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

                                                 முன்செல்ல