இத்தாலி நாட்டின் வடகிழக்கு
பகுதியான பர்மா நகருக்கு அருகே
ஜெனோவா வொலோனியாவில் ஏற்பட்ட
பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி
15 பேர் பலியாயினர்.
இது ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக
பதிவாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் இத்தாலி
நாட்டில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம்
இதுவாகும்.
முன்னதாக கடந்த 20ஆம் தேதி தென்
கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆறு
பேர் வரை கொல்லப்பட்டனர். இது ரிக்டர் அளவு கோலில்
6.0 ஆக பதிவானது.
இரண்டாம் இணைப்பு:
தற்போது கிடைத்துள்ள
அதிகாரபூர்வ தகவலின்படி நிலநடுக்கத்தில்
பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
நிறைய பேர் கட்டிட
இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்பதால்
பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என
அஞ்சப்படுகிறது.





|
|
|
|
|