தமிழர்
விடுதலைக்
கூட்டணியின்
தலைவர் வீ
ஆனந்தசங்கரி,
இந்தக்
கோரிக்கையை
தமிழ்
தேசியக்
கூட்டமைப்பின்
தலைவர் ஆர்.
சம்பந்தனிடம்
விடுத்துள்ளார்.
துன்பப்பட்டுள்ள
மக்களுக்கான
நிவாரணங்களுக்காக
அனைத்து
தமிழ்
கட்சிகளையும்
அரவணைத்து
செல்வது
அவசியமாகும்.
இதன்படி
ஈழமக்கள்
புரட்சிகர
விடுதலை
முன்னணியின்
பத்மநாபா
அணி, எம் கே
சிவாஜிலிங்கத்தின்
தமிழ்
தேசிய
விடுதலைக்
கூட்டமைப்பு,
டெலோ
ஸ்ரீசபாரத்தினம்
அணி
ஆகியவற்றையும்
தமிழ்
தேசியக்
கூட்டமைப்பு
இணைத்துக்கொண்டு
தேர்தலில்
போட்டியிடவேண்டும்
என
ஆனந்தசங்கரி
கோரிக்கை
விடுத்துள்ளார்.
இதன்
மூலமே
அரசாங்கத்துக்கு
உரிய
அழுத்தங்களை
கொடுக்கமுடியும்
என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில்
தமிழ்
தேசியக்
கூட்டமைப்பின்
கீழ்
தேர்தலில்
போட்டியிடும்
தமது
கட்சியின்
தீர்மானத்தில்
மாற்றங்கள்
எவையும்
இல்லை
என்றும் வீ.
ஆனந்தசங்கரி
குறிப்பிட்டுள்ளார்.