Eelatthalainagar news

செய்தி  

சமாதான ஒப்பந்தத்தின் தோல்வியை ஆராய இலங்கை வர முயன்ற நோர்வே நாட்டவருக்கு வீசா மறுப்பு
[ சனிக்கிழமை, 22 சனவரி 2011, 04:26.55 AM GMT ]
 
 
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான ஒப்பந்தம் தோல்வியுற்றமைக்கான காரணம் குறித்து ஆராய இலங்கை வரமுயன்ற நோர்வே நாட்டவர் இருவருக்கு அரசாங்கம் வீசா மறுத்துள்ளது.

2002ம் ஆண்டில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் தோல்வி குறித்து ஆராய நோர்வே நாட்டின் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பிரதானிகள் இருவர் அண்மையில் இலங்கைக்கான விஜயத்துக்கு வீசா அனுமதி கோரியிருந்தனர்.

நோர்வேயில் இயங்கும் மிசல்சன் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் குனார் சோபார் மற்றும் அவரது பிரதி அதிகாரி ஆகியோரே அவர்களாவர். ஆயினும் அரசாங்கம் அவர்களுக்கான வீசா அனுமதியை மறுத்துள்ளது.

சமாதான ஒப்பந்தத்தின் தோல்வி குறித்து ஆராய்வதற்கான பொறுப்பை நோர்வே அரசாங்கமே அவர்களிடம் ஒப்படைத்துள்ளதாக அரசாங்கத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளதன் காரணமாகவே அவர்களுக்கான வீசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

                                       முன்செல்ல