வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

03/04/2011

கிரிக்கெட்டைக் காட்டி அரசாங்கம் எரிபொருட்களின் விலையை உயர்த்தியமை, குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி உணவூட்டுவதைப் போன்றது
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 01:48.06 AM GMT ]
 
கிரிக்கெட்டைக் காட்டி அரசாங்கம் எரிபொருட்களின் விலையை உயர்த்தியமை, குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி உணவூட்டுவதைப் போன்றது
நாட்டு மக்கள் அனைவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி விளையாட்டை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த வேளையில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலைகளை உயர்த்திய செயற்பாடானது குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி உணவூட்டுவதைப் போன்றதாகும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் பெற்றோல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும் டீசல் 3 ரூபாவாலும் சமையல் எரிவாயு 238 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மக்கள் கடந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை, அரசாங்கம் பிழையான வழியில் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பெற்றோலின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்