இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய
நிலையத்தின் பணிப்பாளர் லச்மன் உலுகல்லையே கொமர்சல் வங்கியின் சபைக்கு
நியமிக்கப்பட்டுள்ளார்.லச்மன் உலுகல்ல, 1989
ஆம் ஆண்டில் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார். அத்துடன் வங்கிகள் தொடர்பில்
எவ்வித அனுபவங்களையோ தகமைகளையோ அவர் கொண்டிருக்கவில்லை.
இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர், அஜித் நிவாட்
கப்ராலை வினவியபோது கொமர்சல் வங்கி இந்த விடயம் தொடர்பி;ல் விசாரணைகளை
நடத்தும் என்று குறிப்பிட்டார்.
லச்மன் உலுகல்ல, 90 ஆயிரம் ரூபா பெறுமதியான
மரக்கடத்தல் தொடர்பில் 1989 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்
தண்டனை விதி;க்கப்பட்டவராவார். அத்துடன் அவருக்கு 20 ஆயிரம் ரூபா
ரொக்கப்பிணை தண்டனையும் வழங்கப்பட்டது.
எனினும் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின்
ஆதரவுடன் அந்த தண்டனைகளில் இருந்து அவர் தம்மை சுதாகரித்துக்கொண்டார்.