வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

03/04/2011

இலங்கையின் உற்பத்திகளைப் புறக்கணிக்க வைக்கும் நடவடிக்கைகள் ஐரோப்பா, அமெரிக்காவில் ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 12:49.39 AM GMT ]

 

இலங்கையின் உற்பத்திகளைப் புறக்கணிக்க வைக்கும் நடவடிக்கைகள் ஐரோப்பா, அமெரிக்காவில் ஆரம்பம்
இலங்கையின் பொருளாதார பலத்தைச் சிதைக்கும் வகையில் இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிக்க வைக்கும் நடவடிக்கைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.
அதற்கான முயற்சியில் புலம்பெயர் தமிழர்கள் அமைப்புகள் மட்டுமன்றி, சர்வதேச மட்டத்திலான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கத்தேய நாடுகளில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் ஈடுபட்டுள்ளன.

இலங்கையின் ஆடை உற்பத்திகள், மற்றும் ஏனைய நுகர்பொருட்களை இலக்காகக் கொண்டே பிரஸ்தாப பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பகட்டமாக தற்போதைக்கு இணையத்தளங்கள் வாயிலாக இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிக்க வைப்பதற்கான பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமைகளை மீறல் குற்றச்சாட்டுகளும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடையதாகவும் சாட்சியங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இப்பிரச்சாரம் வெற்றி பெறும் பட்சத்தில் வருடமொன்றுக்கு 200 கோடி அமெரிக்க டொலர் வருமானமீட்ட முடிவதன் மூலம் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரும் அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழியில் தடையேற்படும்.அது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்