முதல் கட்ட எண்ணெய் அகழ்வுப் பணிகள் இந்திய நிறுவனம்
ஒன்றின் உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கனிய வளங்கள் அமைச்சு
அறிவித்துள்ளது. ஆரம்ப படிமுறையின் போது மூன்று எண்ணெய்க் கிணறுகள்
மட்டுமே தோண்டப்படவுள்ளன.
அதன் பின் மன்னார் எண்ணெய்ப் படுக்கையில்
தோண்டியெடுக்கப்படும் எண்ணெய் வளத்தைப் பொறுத்து மேலதிக கிணறுகள்
தோண்டுவது குறித்து கவனத்தில் எடுக்கப்படும் என்றும் அமைச்சு மேலும்
அறிவித்துள்ளது.
அத்துடன் இவ்விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
அறிவுறுத்தலுக்கு அமையவே ஒவ்வொரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு
வருவதாகவும் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்
தெரிவித்துள்ளார்.