இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மதி மட்டக்களப்பில் சுட்டுக் கொலை!
(படங்கள் இணைப்பு)
இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மதி
மட்டக்களப்பில் சுட்டுக் கொலை!
மட்டக்களப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் இராணுவத்தின்
புலனாய்வுப் பிரிவினருடன் செயற்பட்டவருமான மதி என்றழைக்கப்படும் நடராசா
மதியழகன் என்பவர் இன்று நண்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற
இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் கால்கள்
மற்றும் முள்ளந்தண்டு செயலிழந்துள்ள நிலையில் சக்கர நாற்காலியிலேயே இவர் தனது
கடமையினை செய்துவந்துள்ளார்.
அத்துடன் இவர் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய நிர்வாக சபை தலைவருமாவார்.