கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலக்கிண்ண கிரிக்கட்
போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியதும்,
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு கொழுத்தி மக்கள்
ஆரவாரப்பட்டனர்.ஆயினும் நேற்றுப் பகலும்
பொதுமக்கள் அவ்வாறு பட்டாசு கொழுத்த முற்பட்டபோது இனம் தெரியாத நபர்கள்
அச்சுறுத்தி தடுத்துள்ளனர். ஆயினும் அதனையும் மீறி வர்த்தகர்களும்
பொதுமக்களும் பட்டாசு கொழுத்தியுள்ளனர்.
அவ்வாறு பட்டாசு கொழுத்திய வர்த்தக நிலையங்களின்
உரிமையாளர்கள் மீது பொலிசார் தற்போது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
அவர்களின் வர்த்தக நிலையங்கள் முன்பாக குப்பை கூளங்கள் சோ்க்கப்பட்டு,
சூழலுக்கு மாசு விளைவித்ததாகக் கூறியே அவர்கள் மீது வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை அவர்களுக்கு எதிரான வழக்கு
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.