வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 04:19.02 AM GMT ]

 

த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டதையெல்லாம், அரசாங்கத்தினால் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.

எனவே இதுவரை போலல்லாமல், இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியை மதிப்பதன் காரணமாகவே அதனுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.எனவே அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது என்று மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கூட்டமைப்பு கோருவதை போன்று  பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம், நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்களின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

எனவே பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்தும் வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைவது அவசியம் என்று மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ள மேற்படி கருத்தையே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும், தெரிவித்திருந்தார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் எந்த ஒரு அமைச்சர்களும் வடபகுதிக்கு செல்ல முடியாமல் போகலாம் என கருத்து கூறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்