2 லட்சத்து 19 ஆயிரத்து 692 ரூபா பெறுமதியான உரத் தொகை
பாரவூர்தி யொன்றில் ஏற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்
தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று நீதிமன்ற
நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ம் திகதி
வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு பூம்புகார் பிரதேசத்தில்
நேற்று முன்தினம் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உந்துருளியொன்றை திருடிய
குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியை கடந்து
செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதிமன்ற
நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ம் திகதி வரை
விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளனர்.