சூரியன் நாளை முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதே
இதற்கான காரணம் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவநிலை மாற்றம் எதிர்வரும் மாதம்
ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் முன்கூட்டிய காலநிலை தற்போது அதிக
வெப்பமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த 2001 ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு
வரையான காலப்பகுதி வெப்பம் மிகுந்த தசாப்தம் என சர்வதேச காலநிலை ஆய்வு
மையத்தை மேற்கோள்காட்டி இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்
வெளியிட்டுள்ளது.
இந்தநிலையி, வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேற்று
மாகாணங்களில் இந்த வருடத்தில் உயர்வெப்பநிலை நிலவும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தற்போதுள்ள வெப்பநிலையை விட 5 முதல் 10 பாகைகளால்
இந்த வருடத்தி;ல் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.