வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடு – பா.ஜ.க
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 04:09.33 AM GMT ]

 

இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடு – பா.ஜ.க
இலங்கையின் இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடும் ஆகும் என்று இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் புதுடில்லியில் வைத்து தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக இருப்பதாகவும் சுஸ்மா குறிப்பிட்டுள்ளார்.

பாரதீய ஜனதாக்கட்சி, தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல. அது தமிழகத்திலும் கூட எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவிரும்புகிறது.

இந்தநிலையில் தமிழை செம்மொழியாக்கும் அறிவிப்பு விடயத்தில் பாரதீய ஜனதாக் கட்சி தமது ஆதரவை வெளியிட்டமையையும் சுஸ்மா சுவராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்