குறைந்தபட்சம் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும்
கட்டாயம் இடம்பெறச் செய்யவேண்டும். ஏனெனில் சில தனியார் நிறுவனங்களில்
ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் தொங்கவிட்டிருப்பதை நான்
கண்ணுற்றேன். அது தவறு. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொழும்பு நகரின் சில இடங்களில் பிழையாக பெயர்ப்
பலகைகள் காணப்படுகின்றன.
சில பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் மாத்திரமே
காணப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல்
பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம்
எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.