ஏற்கனவே வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த இருவரும் அவர்களது
வசிப்பிடமான பருத்தித்துறைப் பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து
அவர்கள் அங்குவைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறைப் பொலிஸார் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்
தர்கள் இணைந்து அந்த இருவரையும் கைது செய்தனர்.
மற்றைய நபரைத் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கையில்
சிறைச்சாலை அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அந்த நபர் ஒரு வழக்கில்
கைதுசெய்யப்பட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த
நபர் கிளிநொச்சியை சேர்ந்தவராவார்.
இவர்கள் மூவரும் கடந்த 6 மாத காலமாக யாழ்ப்பாணச்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிறுவர்கள் என்ற காரணத்தால் சிறைஅறைகளில் அன்றி பொது அறை
ஒன்றிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த அறையின் ஓட்டைப் பிரித்தே அவர்கள் தப்பிச்
சென்றதாகத் தெரியவருகிறது.