வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

இலங்கைக்கு சீன அபிவிருத்தி வங்கி 108 கோடி 55 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 08:20.30 AM GMT ]

                                                          

இலங்கைக்கு சீன அபிவிருத்தி வங்கி 108 கோடி 55 லட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி
நாடளாவிய ரீதியாக பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 108 கோடியே 55 இலட்சம் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு, சீன அபிவிருத்தி வங்கி கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 313 கோடியே 70 இலட்சம் ரூபாய் உணவு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வடபகுதி இளைஞர்களின் மேம்பாட்டுக்காகவும் கடனடிப்படையில் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காகவும், மின்சார விநியோக நடவடிக்கைகளுக்காகவும், சீன அபிவிருத்தி வங்கி கூட்டுத்தாபனம் 50 கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னுரிமை திட்ட அடிப்படையில் வீதி அபிவிருத்தி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமே உயர்தர உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் நிதியுதவிகளில் பெரும்பாலானவை வடமாகாண மக்களுக்காகவே செலவிடப்படவுள்ளதாக தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்