வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

கட்டுநாயக்க விமான நிலையம் இரட்டை ஓடுபாதைகள் கொண்டதாக விரிவுபடுத்தப்படவுள்ளது
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 09:28.53 AM GMT ]

 

கட்டுநாயக்க விமான நிலையம் இரட்டை ஓடுபாதைகள் கொண்டதாக விரிவுபடுத்தப்படவுள்ளது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இரட்டை ஓடுபாதைகள் கொண்டதாக விரிவுபடுத்தப்படுவதற்கென அதனையண்டிய நுாறு ஹெக்டயார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் கடைசியாக 1986ம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. அதன் பின் விமானநிலையத்தைச் சுற்றிலும் வெற்றுக்காணிகள் இன்மை காரணமாக பல தடவைகள் முன்னெடுக்கப்பட்ட விரிவாக்கல் நடவடிக்கைகள் இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தன.

தற்போதைய நிலையில் கட்டுநாயக்க விமானத்தளத்தில் ஒரேயொரு ஓடுபாதை மட்டுமே இருந்தாலும், அதனைப் பயன்படுத்தி மணித்தியாலமொன்றுக்கு சுமார் இருபத்தி ஐந்து விமானப் பறப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு மேலதிகமாக தற்போது அரசாங்கம் ஹம்பாந்தோட்டையின் மத்தள பிரதேசத்திலும் சர்வதேச விமான நிலையமொன்றை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளதுடன் அதன் ஓடுபாதை 4000 மீற்றர் நீளமும், 75 மீற்றர் அகலம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டு வருகின்றது.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்