கிளிநொச்சி சிறகுகள் பண்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில்
ஆரம்பிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.
சிறகுகள் பண்பாட்டு அமைப்பின் தலைவி திருமதி. தேவிகா கேதீஸ்வரன் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து தெரித்ததாவது போருக்கு
பிந்திய அபிவிருத்தி என்பது பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை இன்னும் ஏற்படுத்தப்படவில்லை
மீள்குடியேற்றம் நிறைவுபடுத்தப்படவில்லை. அச்சம் நிறைந்த மனங்களோடு மக்கள்
இருக்கின்றார்கள்.
அதிலும் குறிப்பாக அதிகாரங்களே எல்லாவற்றையும்
தீர்மானிக்கின்றது. குறிப்பாக இக்கிராமத்திலுள்ள 534 குடும்பங்களில் ஒரு
குடும்பத்துக்குக் கூட நிரந்தரவீடு அமைக்கப்படவில்லை. வெறும்தகரங்கள்
மட்டுமே சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீதிகள் கிரவல் கூட இடப்படவில்லை. 83
குடும்பங்களுக்கு மட்டும் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமண்டபங்களோவிளையாட்டு மைதானங்களோ திருத்தம் செய்யப்படவில்லை.
காணாமல்போனோர் பற்றிய விசாரணைகள் எதுவுமில்லை சிறையில்
உள்ளவர்களுக்கும் விடுதலையில்லை. உலக உணவுத்திட்ட நிவாரணமும் நிறுத்தப்பட்டு
வருகின்றது. இத்தகைய பிண.;ணனியில்தான் அரசியல் தக்கவைப்புகளுக்காக
அபிவிருத்தி எனும் கோசம் பலமாக பேசப்படுகின்றது. ஆனால் எதுவும் நிகழவில்லை.
உலகத்திலேயே இத்தைகய எளிமையான கொட்டகையொன்றைபயிற்சி நிலையமாக திறந்து
வைக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் நானாகத்தான் இருப்பேன்.
நாங்கள் யாரையும் நம்பமுடியாது. எங்கள் வளங்களையும்
எங்கள் வல்லமைகளையும் ஒருங்கிணைத்து சுயகைத்தொழில்களை மேற்கொள்ள பழக
வேண்டும். காலம் முழுதும் கையேந்தி வாழும் இனமாக எம்மை உருவாக்க
முனைகின்றார்கள். இதனப்புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த
நீங்கள் சுய பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும்.
தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்படுகின்ற தையல்
பொருட்களுக்கு நிகராக கலை நயமும் கவர்ச்சிகரம்மிக்க உற்பத்த்pகளை
நீங்கள்மேற்கொள்கின்றபோது தன்னிறைவு உடையவருமானம் ஒன்றை உருவாக்க முடியும்
இந்நிகழ்வில் அருட்தந்தை துரைரட்ணம்அடிகளார் கிராமஅலுவலர் சந்திரபாலன்
முன்னாள் கிராம அலுவலர் வைரவநாதன் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கிராம
மாதர்சங்க பிரதிநிதிகள்எனப்பலரும் கலந்து கொண்டனர்.