வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

தமிழ் மக்களின் தேசிய அரசியல் உணர்வு மரணித்துவிடவில்லை - பஸீர் சேகுதாவூத்
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 04:29.09 PM GMT ]

 

தமிழ் மக்களின் தேசிய அரசியல் உணர்வு மரணித்துவிடவில்லை - பஸீர் சேகுதாவூத்
வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
 
தமிழ் மக்களின் தேசிய அரசியல் விடுதலைப்புலிகள் இருந்தபோதிலும் இல்லாத போதிலும் அப்படியே உள்ளன.

ஆனால் முஸ்லிம்களின் தேசிய அரசியல் என்றபோக்கு மங்கிப்போய் ஊர் அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் வந்திருக்கின்றது.

இது முஸ்லிம் சமுத்தின் அரசியல் எதிர்கதாலத்தை பெரிதும் பாதிக்கும்.

காத்தான்குடியில் இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் பேசும் போது இவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன.

அந்த உணர்வின் வெளிப்பாடுதான் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்