களுத்துறையிலுள்ள இந்து ஆலயமொன்றுக்கு
பிரிட்டன் உல்லாசப் பயணியொருவரை அழைத்துச் சென்ற வழிகாட்டியொருவர், அதனை
சுனாமி முகாமாகக் குறிப்பிட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு
உதவுவதற்கென உல்லாசப் பயணியிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்பும் இந்து ஆலயங்களைக்
காட்டி உல்லாசப் பயணிகளிடம் பணம் பறித்த பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள
நிலையில், இச்சம்பவம் பற்றி பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கோயிலின்
குருக்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.