அதன் காரணமாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களான பீலிக்ஸ்
பெரேரா, பண்டு பண்டாரநாயக்க, சரத் குமார குணரத்தின மற்றும் முன்னை நாள்
பாராளுமன்ற உறுப்பினர் நீல் ரூபசிங்க ஆகியோர் மட்டுமன்றி மேலும் பல
முக்கியஸ்தர்களும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குப் பதிலாக அமைச்சர் பசிலின் தீவிர ஆதரவாளரான
மோ்வின் சில்வா மற்றும் மேல்மாகாண சபை அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர்
முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக ஆளுங்கட்சி
அரசியல்வாதிகள் பல இடங்களில் மோதிக்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவியே இவ்வாறான
நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது. கம்பஹாவில்
மட்டுமன்றி முழு இலங்கையிலும் அமைச்சர் பசிலின் ஆதரவாளர்களை
முன்னிலைப்படுத்துவது அவரது நோக்கமாகும்.
ஆயி்னும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவற்றையெல்லாம் கண்டும்
காணாதது போல ஒரு கட்டம் வரை அனுமதித்துக் கொண்டிருப்பதாகவும் அறிய
முடிகின்றது.