வடக்கில் இருக்கும் பெரும்பாலான அரச அதிகாரிகளும்
அரசாங்கத்துக்கு விரோதமான முறையில் மக்களைத் திசை திருப்பவே முயற்சி
செய்வதன் காரணமாக மக்களும் அரசாங்கத்தை நாடி வரத் தயக்கம் காட்டுவதாகவும்
அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.ஆளும் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி
மன்றங்களுக்குத் தெரிவானோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு
நேற்று முசலியில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே
அமைச்சர் ரிசாத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் அபிவிருத்தி மற்றும் இன்னோரன்ன
நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி, அமைச்சர்கள், அரசாங்கத்தின் ஏனைய நிதியுதவிகள்
என்பன இப்பிரதேசங்களில் அரசாங்கத்துக்கெதிராகவே அதிகாரிகளால்
பயன்படுத்தப்படுகின்றது.
அத்துடன் அரசாங்கத்தை நாடிச் செல்லாதவாறு பொதுமக்களும்
இங்குள்ள அரச அதிகாரிகளால் மிரட்டப்படுகின்றனர். அரசாங்கத்தின்
நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் குறுக்கே நின்று
தடுக்கின்றனர்.
அத்துடன் பெரும்பாலான அரச அதிகாரிகள் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கு ஆதரவாக நடந்து கொள்வது மட்டுமன்றி, பொதுமக்களையும் அதன்
பால் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.அதனை கவனத்தில் எடுத்து அதற்கு சரியான
முறையில் பதில் நடவடிக்கையொன்றை நாங்கள் எடுக்கத் தவறினால் இப்பிரதேசங்களில்
மீண்டுமொரு யுத்தம் வெடிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.