வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமையான கிணறொன்று ஈச்சிலம்பற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 02:51.58 PM GMT ]

 

ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமையான கிணறொன்று ஈச்சிலம்பற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாணத்தின் ஈச்சிலம் பற்று பிரதேசத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமையான கிணறொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈச்சிலம்பற்று அம்மன் கோயிலை அண்டியுள்ள பிரதேசத்தில் இருந்தே பிரஸ்தாப பழைமை வாய்ந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

கி.பி. இரண்டாம் நுாற்றாண்டில் அக்கிணறு தோண்டப்பட்டிருக்கலாம் அல்லது பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருளியல் திணைக்களம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மலசல கூடத்துக்கான குழியொன்றைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரதேசவாசியொருவரே பிரஸ்தாப கிணற்றைக் கண்டுபிடித்துள்ளார்.

ஆயினும் அக்கிணறு பற்றிய முழுமையான விபரங்கள் வெளிவர முன்பே அது லங்கா பட்டுன விகாரை மற்றும் பாசாண பப்பத விகாரை என்பவற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது என்று கூறி அதனை பௌத்த மயமாக்கும் முயற்சியில் தொல்பொருளியல் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

அது மட்டுமன்றி அவ்வழியாகவே புத்தரின் தந்த தாது எடுத்து வரப்பட்டது என்றும் புதுக்கதையொன்றை கட்டிவிட்டுள்ளது.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்