வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் காணாமற்போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 12:38.26 PM GMT ]

 

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் காணாமற்போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் இளவாலைப் பிரதேசத்தைச் சோ்ந்த இளம் குடும்பஸ்தர் காணாமற்போயுள்ளதாக இன்று அவரது உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் காப்புறுதி நிறுவனக் கிளையொன்றில் கள இணைப்பாளராக கடமையாற்றும் முப்பத்து நான்கு வயதான ராஜேந்திர மோகன் என்பவரே காணாமற் போயுள்ளதாக அவரது தாயார் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

கடந்த 31ம் திகதி அவர் தன் அலுவலக வேலை நிமித்தம் கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின் அவருடன் எந்தத் தொடர்புகளும் இல்லாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர் கொழும்பிலுள்ள எந்தவொரு உறவினர் வீட்டுக்கும் செல்லாத நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதன் காரணமாகவே அவரது தாயார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்