வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் கணவனால் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டுள்ளார்
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 12:19.43 PM GMT ]
 
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் கணவனால் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணப் பெண்ணொருவர் தனது கணவனால் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவர் ஒருவரே தன் மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 25 வயதுடைய பெண்ணொருவரே அவ்வாறு கொளுத்தப்பட்டுள்ளார்.

அவரது அலறல் கேட்டு ஓடிவந்த அயலவர்கள் ஆபத்தான நிலையில் அவரை யாழ். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்பெண்ணைக் கொளுத்திய கணவர் தலைமறைவாகியுள்ளார்.

குருநகர் பொலிசார் அவரைத் தேடி வருவதுடன், மேலதிக பொலிஸ் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்