அக்குதிரை தன்னந்தனியாக வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி
வருவதை பலரும் கண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் மொபைல் போன் ஊடாக
குதிரையைப் படம் பிடித்துள்ளார்.ஆயினும் குதிரையை நெருங்கிப் போய் தெளிவாகப்
படமெடுக்க முனைந்த போது அது மிரண்டு ஓடியுள்ளது.
இதற்கிடையே முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்பட்ட
பிரஸ்தாப குதிரை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன்
பயன்படுத்திய குதிரை என்பதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவர் ஓய்வு நேரங்களில் குதிரைச் சவாரியில் ஈடுபடுவதை
பெரிதும் விரும்பியிருந்ததாக விடுதலைப் புலிகளின் பல முக்கியஸ்தர்களும்
கருத்து வெளியிட்டுள்ளனர்.அத்துடன் அவர் அவ்வாறு குதிரைச் சவாரி
மேற்கொள்ளும் நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முன்னை நாள் விடுதலைப்
புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரிடமும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.