வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

 
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 11:43.27 AM GMT ]
 
வடமாகாணத்தில் நாளை மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மின்சார விநியோகம் நாளை செவ்வாய்கிழமை இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி பிரதேச மின்பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இந்த மாவட்டங்களில் நாளை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

33 கிலோவாட் உயர் அழுத்த மின்மார்க்க பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டே இந்த மின்சார விநியோக தடை அமுலுக்கு வருகிறது.

இதுதவிர, எதிர்வரும் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வவுனியா நேரியகுளம் சந்தியில் இருந்து பறையனாலன் குளம் சந்திவரை மின்சார விநியோகம் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தடைபட்டிருக்கும் எனவும், இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி பிரதான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்