குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வடக்கே
செல்லும்போது பலாலி விமானத்தளத்தை விட்டே வெளியேற முடியாத நிலையேற்படலாம்
என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 07ம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துடனான
கலந்துரையாடலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபைகளுக்கு காணி
மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் வனப்பாதுகாப்புக்கான அதிகாரத்தையும்
கோரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கு முன்பே அவற்றை வழங்க முடியாது என்று ஜனாதிபதி
மறுப்புத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படை அதிகாரிகளும் பிரஸ்தாப
அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்துக்கு அண்மையில்
சுற்றுப்பயணம் மேற்கொள்ள முயன்ற பாரதீய ஜனதாக்கட்சி முக்கியஸ்தர்கள்
திருப்பி அனுப்பப்பட்டதை உதாரணமாகக் காட்டி, பலாலி விமானத்தளத்தில் மத்திய
அரசாங்க அமைச்சர்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று பாதுகாப்புத்துறை
உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன் மாகாண சபைகளுக்கு வனப்பாதுகாப்புக்கான அதிகாரம்
வழங்கப்படும்போது முல்லைத்தீவு வனாந்திரத்தில் பாதுகாப்புத்தரப்பினருக்க
உட்பிரவேசிக்கவே முடியாத நிலையும் ஏற்படலாம் என்றும் அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர்களின் கருத்தைக் கவனத்திற் கொண்டே ஜனாதிபதி பிரஸ்தாப
மறுப்பை வெளியிட்டுள்ளார்.