மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவர் ஒருவரை பொதுமகன்
ஒருவர் தாக்கியதை அடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
மருத்துவர் தாக்கப்பட்டதனை அடுத்து, மருத்துவமனையில்
கடமையாற்றும் மருத்துவர்கள் அனைவரும் சுகவீன விடுமுறையில் சென்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களால், மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க
நடவடிக்கையினை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில், தலைமை மருத்துவ அதிகாரி
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.