வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

04/04/2011

சன் சீ கப்பலை தடுப்பதற்கு வாய்ப்புகள் பல இருந்தும் நழுவ விட்டதாக கனடா மீது குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 10:34.20 AM GMT ]

 

சன் சீ கப்பலை தடுப்பதற்கு வாய்ப்புகள் பல இருந்தும் நழுவ விட்டதாக கனடா மீது குற்றச்சாட்டு
கனடாவும் அதன் அயல் நாடுகளும் எம்.வி. சன் சீ கப்பலை தடுத்து நிறுத்துவதற்கு கிடைத்த பல வாய்ப்புகளை தவற விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஏ நெஷனல் போஸ்ட் செய்தித்தாள் தமது விசாரணைகளில் இருந்து இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 9 ம் திகதி தாய்லாந்து கடற்படையினர் எம்.வி. சன் சீ கப்பலை அவதானித்தனர்.

அதன் பின்னர் பல்வேறு நாடுகளின் கடற்பரப்பின் ஊடாக இந்த கப்பல் பயணம் செய்தது. எனினும், இதன்போது அந்த கப்பலை தடுத்து நிறுத்த எந்த நாடுகளும் முன்வரவில்லை.

இதன் காரணமாகவே எம்.வி. சன் சீ கப்பல் கனடாவுக்குள் பிரவேசிக்க முடிந்ததாக நெஷனல் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சன் சீ கப்பலின் அகதிகள் தாய்லாந்திருந்து புறப்பட்டமையை கனடாவின் தமிழ் காங்கிரஸின் சட்ட ஆலோசகர் கரி (Gary) ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டுள்ளமையையும் ஏ நஷனல் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
 

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்