இந்த நடைமுறை எதிர்வரும் ஜுலை முதலாம் திகதியுடன்
அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு தொடர்பான ஆலோசனை குழு, உணவு மற்றும் பொதியிடப்பட்ட
உணவுகள் குறித்த பணிப்புரைகளை விடுத்துள்ள நிலையில் அமைச்சர் மைத்திரிபால
சிறிசேன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜுலை 1 ம் திகதி தொடக்கம் மனித
பாவனைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொதியிடப்பட்ட உணவு வகைகள் தடை
செய்யப்படவுள்ளது.
அன்றைய தினத்திலிருந்து உணவுப்பொருட்களும், பொதி உலர்
உணவுகளும், பொதியிடல் நிபந்தனைகளுக்கு புறம்பாக இறக்குமதி செய்தல், உற்பத்தி
செய்தல், எடுத்துச் செல்லல், விற்பனைக்காக காட்சிப்படுத்த தடை செய்யப்படும்
என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது