வான்கூவர் விமான நிலையத்தில், ராபர்ட்
டெகன்ஸ்கி என்ற இளைஞர் ராயல் கனடிய பொலிஸ் பிரிவை சேர்ந்த உறுப்பினரின் எந்திர
துப்பாக்கி தாக்குதலில் இறந்தார்.
மரணம் அடைந்த ராபர்ட் டெகன்ஸ்கி போலந்தில்
இருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள காம்லூப்ஸ் பகுதிக்கு வந்த போது இச்
சம்பவம் நடந்தது. இந்த துயர நிகழ்வு குறித்து ஆர்.சி.எம்.பிக்கு எதிராக பொது
புகார்கள் ஆணையம் விசாரணை செய்தது. இந்த விசாரணையில் டெகன்ஸ்கி மரணத்திற்கான 23
விடயங்கள் கண்டறியப்பட்டன.
தீவிர திறன் வாய்ந்த ஆயுதங்களை தொடர்ந்து
பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ஆயுதத்தால் சுடுவதற்கு முன்பாக கடுமையான
நடைமுறையை பின்பற்ற வேண்டும் போன்ற 16 வித பரிந்துரைகளை ஆர்.சி.எம்.பி
கண்காணிப்பு அமைப்பு அறிவுறுத்தியது.
ராயல் கனடிய பொலிஸ் பரிவு கடந்த ஆண்டு மே
மாதம் ஒரு புதிய டேசர் ஆயுத கொள்கையை வெளியிட்டது. வன்முறையில் ஈடுபடும்
நபர்கள் ஒருவரை மூர்க்கமாக தாக்கும் போதோ அல்லது அதற்கான நடவடிக்கைகளுக்கு
தயாராகும் போதோ எந்திர துப்பாக்கியை பயன்படுத்துவோம் என அதில் தெரிவித்து
இருந்தார்.
ராபர்ட் டெகன்ஸ்கி மரணம் குறித்து விசாரணை
செய்ததில் 4 அதிகாரிகளின் பதில்களில் நம்பகத்தன்மை இல்லை என புகார்கள் ஆணையம்
அதிருப்தி தெரிவித்தது. புகார்கள் ஆணைய தலைவர் இயான் மெக்பைல்லுக்கு
ஆர்.சி.எம்.பி ஆணையர் வில்லியம் எலியட் எழுதிய கடிதத்தில் வான்கூவர் விமான
நிலைய இளைஞர் விபத்தில் எந்திர துப்பாக்கி தவறுதலாக பயன்படுத்தபட்டுள்ளது என
ஒப்புக் கொண்டார்.