வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

விக்கிலீக்ஸ் உடைந்தது: பரபரப்பு தகவல் இனி தர முடியாது

[ வெள்ளிக்கிழமை, 11 பெப்ரவரி 2011, 08:21.41 மு.ப GMT ]

ஈராக் குறித்த பென்டகன் ராணுவ தகவல்களையும், அமெரிக்க தூதரக ரகசியங்களையும் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய இணையதளம் விக்கிலீக்ஸ் ஆகும்.
ஈராக் குறித்த பென்டகன் ராணுவ தகவல்களையும், அமெரிக்க தூதரக ரகசியங்களையும் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய இணையதளம் விக்கிலீக்ஸ் ஆகும்.

இந்த இணையதளத்தின் நிறுவனர் ஜீலியன் அசாஞ்ச் ஆவார். இவருடன் விக்கிலீக்ஸ் நிறுவன கூட்டாளியாக இருந்தவர் டேனியல் டொம்ஸ்ட்பெர்க். இவர் பெர்லினில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: விக்கிலீக்ஸ் இணையதள கட்டமைப்பு சீர் குலைந்து விட்டது. அங்கு மெயில் சர்வர் இல்லை. இதனால் ஒரு தகவல் கூட உங்களால் சமர்பிக்க முடியாது என தெரிவித்தார்.

"இன்சைட் விக்கிலீக்ஸ்" என்ற தலைப்பில் டேனியல் புத்தகம் எழுதியுள்ளார். இதில் அசாங்ஞ்சுடன் பணியாற்றிய நாட்கள் குறித்து எழுதியுள்ளார். கடந்த காலத்தில் அவுஸ்திரேலியாளரான அசாங்ஞ்சின் நிறுவனத்தை விட்டு விலகியதாக தெரிவித்தார்.

விக்கிலீக்ஸ் நிறுவனத்தை விட்டு விலகிய விடயம் அசாங்ஞ்சால் தவறாக சித்தரிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்

 

                                                                       முன்செல்ல