அரசாங்கத்துக்கு எதிரான செய்திகளை
வெளியிடுவதில் பல ஊடகவியலாளர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அதன் காரணமாக
உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவதாகவும் அவர் மேலும்
சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மறைந்த
அமைச்சர் பெ. சந்திரசேகரனின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை மீது கலந்து
கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் துணிச்சலாக செய்திகளை
வெளியிட்டு வந்த டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்கா லியனாரச்சி
கூட தற்போது கண்டபடி முதுகை வளைத்து அரச தரப்பினருக்கு கூழைக் கும்பிடு போடத்
தொடங்கியுள்ளதாக அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார்.
அவ்வாறான செயற்பாடுகள் மூலம்
பத்திரிகையாளர்கள் பெரும் அநீதியிழைப்பதாக கண்டனம் தெரிவித்த ரணில்
விக்கிரமசிங்க, மறைந்த அமைச்சர் சந்திரசேகரன் கூட அவ்வாறான விடயங்களால்
பாதிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக் காட்டுகின்றார்.
அத்துடன் பெரும்பான்மையினரின்
கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன்
செய்திகளைப் பிரசுரிப்பதாகவும் விமர்சித்துள்ள ரணில் விக்கிரமசிங்க,
அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் சிறுபான்மை அரசியல் தலைவர்களுக்கு
எதிராக பல ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.