இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப்
படைகளுக்கு எதிரான தகவல்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதில் அவ்வாறான சில
தொண்டர் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளின்
போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் ஒரு கட்டமாக அமெரிக்கத் தொண்டு
நிறுவனமொன்றின் முக்கியஸ்தர்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு
எதிரான தகவல்களைக் கையளிக்க முயன்ற ஐவர் அண்மையில் தம்புள்ளையில் கைது
செய்யப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பைச் சோ்ந்த அவர்கள் ஐவரையும்
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொலிசார் கைது செய்திருந்தனர்.
அவர்களிடமிருந்து அரச விரோதத் தகவல்களைப்
பெற்றுக் கொள்ள முயன்ற அமெரிக்க தொண்டு நிறுவனம் தொடர்பான விசாரணைகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் முடிவில் அவர்கள்
குற்றவாளிகளாகக் காணப்படும் பட்சத்தில் நாட்டை விட்டும் வெளியேற்றப்படுவர்
என்றும் அறியக் கிடைத்துள்ளது.