வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

03/04/2011

வெள்ளை தமிழச்சி அடேல் பாலசிங்கத்தின் தாயார் காலமானார்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 03:51.32 PM GMT ]
 
வெள்ளை தமிழச்சி அடேல் பாலசிங்கத்தின் தாயார் காலமானார்
தேசத்தின் குரல் அமரர் அன்டன் பாலசிங்கத்தின் துணைவியாரான அடேல் பாலசிங்கத்தின் தாயார் பிரித்தானியாவில் இயற்கைச் சாவடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் ஆனா அடேல் பாலசிங்கம் தமிழீழ மக்களால் வெள்ளை தமிழச்சி என்று அழைக்கப்படுபவர்.

தேசத்தின் குரலுடன் இணைத்து அவரின் சிந்தனைகளுக்கு துணையாக இருந்து பக்க பலமாக இருந்தவர் அடேல் பாலசிங்கம்.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால நிகழ்வுகளை, தனது அனுபவங்களை சுதந்திர வேட்கை என்னும் தனது நூலில் எழுதி ஈழ வரலாறு தெரியாத பல மக்களுக்கும் தெரிய வைத்தவர்.

அவரின் தாயார் பிரித்தானியாவில் இன்று சாவடைந்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய உலகத்தமிழ் மக்களின் சார்பில் இறைவனைப் பிரார்த்திப்போமாக.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்