வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்

செய்தி  

03/04/2011

த. தே.கூட்டமைப்பு கோரியுள்ள பொலிஸ்-காணி அதிகாரங்கள் வழங்க முடியாது - அமைச்சர் கெஹலிய
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 11:28.11 AM GMT ]
 
த. தே.கூட்டமைப்பு கோரியுள்ள பொலிஸ்-காணி அதிகாரங்கள் வழங்க முடியாது - அமைச்சர் கெஹலிய
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வரும்  பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத் திட்டமாக மாகாணசபைகளுக்கு காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் முன்வைத்துள்ளது.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பதாகவும், பொலிஸ் அதிகாரங்களையும் காணி அதிகாரங்களையும் வழங்க முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு அங்கமாகவுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அதிகாரங்கள் இரண்டினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எனினும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது.

காணி அதிகாரங்களும், பொலிஸ் அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கவேண்டிய முக்கிய கட்டமைப்புகளாகும்.

இதுகுறித்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் கூறுகையில்,

தமிழத் தேசியக் கூட்டமைப்பு யோசனைத் திட்டமாக முன்வைத்து கோரியுள்ள காணி அதிகாரங்களையும், பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது.

எனினும் மத்திய அரசாங்கத்தின் கீழ் அதிகாரக் கட்டமைப்பாக இருக்க வேண்டிய   பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது.

அத்தோடு காணி அதிகாரம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதன் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றார்.

 

                                                       முன்செல்ல             

 

 

 

 

 

 

 
வணக்கம் ஈழத்தலைநகர்.காம் செய்திகள்